மின் கட்டணம் அதிகரிக்கப்படலாம்

தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு மின்சார சபை, பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக மின்சார தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், விடயத்தினை ஆராயாமல் இதுதொடர்பான கருத்தினை முன்வைக்க முடியாதென தெரிவித்தார்.